சென்ற இதழ் தொடர்ச்சி...
துலாம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 17, 18, 26, 27. பாதக நாட்கள்: 5, 6, 12, 13, 19, 20.
சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: ராசியிலேயே புதன், சுக்கிரன், சூரியன் அமர்ந்துள்ளனர். ஆண்- பெண் இருவரும் சிற்றின்ப விவகாரங்களில் துறவிபோல் நடப்பது நன்று. பெண்கள் வெண்ணிறப் பசுவுக்கு புல், கீரை கொடுப்பது நல்ல பரிகாரம்.
ஆண்கள் சிறிது நவதானியத்தை பசுவின் கோமியத்தில் ஊறவைத்து, அடுத்தநாள் திருஷ்டிசுற்றி செடியிலோ நீர்நிலையிலோ போடலாம்; உத்தியோகத்தில், மாணவர்கள் தேர்வில்- எதில் கலந்துகொண்டாலும் வெற்றி உங்கள் பக்கம். 5, 6 தேதிகளில் வேலையும் கிடைக்கலாம். கலைஞர் களுக்கு பழைய நண்பர்களால் புதுவாய்ப்பு வரும். இரண்டாவது வாரம் கலந்துகொள்ளும் திருமண வைபோகத்தில் வாயடக்கம் நன்று.
சுவாதி: மாணவர்களுக்கு சொந்தபந்தங்கள் கல்விக்கான புதுப்பாதை அமைத்துத் தருவார்கள். கணவன்- மனைவியிடையே புதுநபர் அபிப்பிராய பேதத்தை ஏற்படுத்த முயல்வார்கள். 17, 18 தேதிகளில் உஷார். வாகனம் ஓட்டுவோர் 19, 20 தேதிகளில் முழுகவனம் செலுத்துவது நன்று. அலுவலக ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் பூரண ஆதரவு நல்வழி காட்டும். குடும்பத்தில் புதுச்சூழ்நிலை உருவாகி அதற்காக முழுமூச்சுடன் செயல்பட நேரிடும். செவ்வாய் கன்னியில் இருப்பதால், பொது இடங்களில் சந்திக்கும் குடும்ப நண்பர்களிடம் தேவையற்ற பேச்சைக் கட்டுப்படுத்துதல் நன்று. வீட்டில் தேவையில்லா பழைய ஆயுதங்கள் இருந்தால் அவற்றை அகற்றுதல் நன்று.
விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: உத்தியோகம் பார்ப்பவர்கள் மாதத்தின் கடைசி வாரம் பாராட்டும், உத்தியோக உயர்வும் எதிர்பார்க்கலாம். 26, 27 தேதிகளில் ரகசியங்களை வெளியே கூறுவது கூடாது. கணக்கு, வருமானத் துறையினர் பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது கூடாது. இம்மாதம் மாமன், மைத்துனருடன் கூட்டு வியாபாரம் செய்வது கெடுதலை உருவாக்கும். பெண்கள், வளர்பிறை 3, 6 நாட்களில் சந்திரனை மாலை நேரம் வணங்குவ தால், பார்வதியின் அருளைப் பெறலாம். சொந்த ஜாதகத்தில் சந்திரனுடன் ராகு காணப் பட்டால், தம்பதிக்குள் வீண் சந்தேகம் இம்மாதம் உருவாகும்.
விருச்சிகம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 10, 11, 19, 20, 28, 29. பாதக நாட்கள்: 7, 8, 15, 16, 21, 22.
விசாகம் 4-ஆம் பாதம்: மாதத்தின் முதல்வாரம் சில தடைகளுடன் உதயமானாலும், 4, 6 தேதிகளில் பொருளா தாரரீதியாக நல்லவற்றை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டும் வாய்ப் புள்ளது. ஹோட்டல், ஸ்டேஷனரி, தங்க நகை வியாபாரமும் லாபத்தைப் பெற்றுத் தரும். ராசிக்கு 12-ல் புதன் இருப்பதால், ஆன்மிகம் சார்ந்த செலவினம் அதிகமாகும். கேது, சனி இணைந்து 2-ல் இருப்பதால், சிறு மண்சட்டி வாங்கி தென்திசை நோக்கி, வலப்புறம், இடப்புறம் திருஷ்டிசுற்றி ஓடும் நீரில் போடுவது நல்லது. ராகுவால் வைத்தியச்செலவினம் கூடும்போது, மூன்று செம்பு வாஷர் அல்லது ஓட்டைக் காலணாவை குளித்தபின் ஓடும் நீரில் போடவும்.
அனுஷம்: சூரியன் அமர்ந்துள்ள இடம் பகையை வெல்லும். பராக்கிரமும், பணவசதியும் பெற்றுத்தரும் வாய்ப்புள்ளது. முன்பு யாரோ கட்டிவைத்த வீட்டை வாங்க முயற்சித்தால் வெற்றிபெறலாம். மூன்றாவது வாரம் பெண்கள் திடமனதுடன் செயல்படவேண்டும். 19, 20 தேதிகளில் மனம் வேதனைப்படும் படியான செய்தி நாடிவரும். புதன் வீட்டில் ராகு இருப்பதால் 36 வயதைக் கடந்தவர்கள் உடல்ரீதியாக சில வேதனைகளை எதிர்கொள்ள நேரிடும். சனி தசை, சனி புக்தி நடந்துவந்தால், உடல் பருமன் உள்ளவர்கள் இடக்கையில் வெள்ளி உலோகக் காப்பு அணிதல் நன்று. சுக்கிரன் பணவரவைப் பெற்றுத் தருவார்.
கேட்டை: இம்மாதத்தின் கடைசி வாரம், மாணவர்களும் மற்றவர்களும் வெற்றிக்கான செய்திகளைத் தொடராகப் பெறலாம். 27, 29 தேதிகளில் உஷார்நிலையில் செயல்படவேண்டும். பணிபுரிவோர் தங்களுக்குக் கீழ்நிலையில் செயல்படுவோரிடம் பொறுப்புகளைத் தருதல் கூடாது. மாதக்கடைசியில் வீரநடைபோடலாம். ஐந்து செவ்வாய்க்கிழமைகள் ஒருபொழுது விரதம் கடைப்பிடிப்பது நன்று. ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய் வதும் நல்லது. தலைவாசலுக்கு நேராக கட்டிலிலோ, தரையிலோ படுத்துத் தூங்குவது, அதிலும் ஈரக்காலுடன் படுப்பது கூடாது.
தனுசு
ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 4, 12, 13, 21, 22, 30, 31. பாதக நாட்கள்: 10, 11, 17, 18, 23, 24.
மூலம்: ராசியிலேயே சனி பகவான் இருப்பதால், நன்செய்ப் பயிரைவிட புன்செய்ப் பயிர்தான் விவசாயத்தில் லாபத்தைப் பெற்றுத்தரும். காவல்துறையில் பணிபுரிவோர் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க பெரு முயற்சி எடுக்கவேண்டும். மாதத்தின் முதல் வாரம் 3-ஆம் தேதி மாலைக்குமேல் 5-ஆம் தேதிவரை நெருக்கடிகள் தொடரும். இரண்டாவது வாரம் 8, 9-ஆம் தேதிகளில் சுயகௌரவம் அதிகமாகும். குடும்பத்தார் இம்மாதம் தங்குதடையின்றி பேராதரவு தருவார்கள். "இம்- உம்கம்- க்மாங்- சிங்- ஆயினி- மாகினி விஷ்ணு சகோதரி- சர்வானி- உமாதேவி- பராசக்தி- நல்கி' என்று வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரம் வரும்போது கூறுவதால் சக்தி அருள்புரிவாள். நல்லவை நடக்கும்.
பூராடம்: புதன் வீட்டில் ராகுவும், 7-ஆம் பார்வையில் கேதுவும், சனியும் தனுசில் இருப்பதால், தம்பதிகள் கடந்தகாலப் பெருமையைப் பேசாதிருப்பது நன்று. சூரியன், புதன், சுக்கிரன் கூடியிருப்பதால் உத்தியோகத்துடன் உபதொழில் செய்வோர் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். மூன்றாம் வாரம் உழைப்பைமீறிய வருமானம் கிடைக் கப்பெறும். இம்மாதம் சனி ஹோரையில் சிறிது நீரை வாயில் உள்ளடக்கி மேற்கு நோக்கி உமிழ்வதால் சனியின் தாக்கம் இல்லா திருக்கும். புதிய மஞ்சள்துணித் திரியால் விளக் கேற்றினால், செய்வினை, பில்லி, சூனியம் போன்ற கெடுதல் விடைகொடுக்குமாம்.
உத்திராடம் 1-ஆம் பாதம்: இம்மாதம் எந்தவிதத்திலாவது பொருளாதாரத்தை திருப்திகரமாக சமாளிக்கலாம். நேரத்தை வீணடிக்கக்கூடாது. மூன்றாவது வாரம் 17, 18 தேதிகளில் பிறரை நம்பி எந்தப் பொறுப்பு களையும் ஒப்படைத்தல் வேண்டாம். 21, 23 ஆகிய தேதிகளில் நீண்டதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 26, 27 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளால் பெரு மிதம் கொள்ளலாம். பூமி காரகனான அங்கா ரகன் கன்னியில் இருப்பதால், பூர்வீகச் சொத்து களைப் பிரிக்க எண்ணுவதைத் தவிர்க்க வேண்டும். இப்போது வயது 4, 5, 10, 12, 18 மற்றும் 40 எனில் ஆரோக்கியக்குறைகள் வந்து மறையும். அதிர்ஷ்ட தேவதை சுப்பிர மணியர்.
மகரம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 15, 16, 23, 24. பாதக நாட்கள்: 12, 13, 19, 20, 26, 27.
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: சனியும் கேதுவும் தனுசில் இருப்பதால், இடது கண் பார்வையில் பின்னடைவு வரும். 48 வயதைக் கடந்தவர்க்கு பாதிப்பு ஏற்படும். 72 வயதில் இருப்போர் கண் பார்வையில் மெத் தனம் கூடாது. கணவன்- மனைவியிடையே இருக்கும் விரிசல் நெருக்கத்திற்கு வழிவகுக்கும். தாய்வழி சொந்தத்தில் பகை இருந்தால் ராகு தீர்த்துவைப்பார். 4-ஆம் தேதி மாலைக்கு மேல் 6-ஆம் தேதிவரை முதுகுவலி அல்லது அண்டை அயலாருடன் பகையேற்படும். இம்மாதம் இரண்டாவது வாரம் "பிசி'யாகக் காணப்படுவீர்கள். 10, 11 தேதிகள் அதிக செலவினத்தை உருவாக்கும். தீட்டுக்காலத்தில் கட்டிலில் படுப்பதைத் தவிர்த்து பூமியில் படுப்பது நல்லது.
திருவோணம்: ராகு பகவான் தன்னந்தனி யாய் புதன் வீட்டில் இருப்பதால், பொதுநலத் தொண்டர்கள், அரசியல்வாதிகள் பிறருக்காக வேலை வாய்ப்பு, இடமாற்றம், உத்தியோக உயர்வுக்காக முயன்றால் வெற்றி. முழு கருமை நிற நாய் வளப்பவர்கள் நல்லவற்றை எதிர்பார்க்க லாம். உங்களுக்கு எல்லா காரியங்களும் நீண்டநாள் தடை என்றால், ஒரு கருப்பு நிறக் கண்ணாடி புட்டியில் ஒரு வெள்ளி உருண் டையைப் போட்டு மூடி வேப்பமர வேரின் அடிப்பாகத்தில் புதைத்துவிட்டால் முட்டுக் கட்டைகள் போகும். 22, 23 தேதிகளில் நல்லோர்களின் நட்பால் பல நன்மைகள் நடைபெறும். வியாபாரம் பெருகும்.
அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்: பொது வாழ்வில் நல்ல பெயர் வாங்க தக்க தருணம். 26, 27 தேதிகளில் எந்த புது முயற்சியும் வேண்டாம். அண்ணன்- தம்பியருள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கோர்ட் கேஸ் என அலைந்துகொண்டிருந்தால் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். சூரியனும் புதனும் துலாத்தில் இருப்பதால், இப்போது வயது 24 எனில் தந்தைக்கு யோகம் தரும் சூழ்நிலை உதயமாகும். செவ்வாய் ஹோரையில் சிறிது தேனை தண்ணீருடன் கலந்து உட்கொள்வதால் கெடுதல் போகும். ஒரு இஞ்ச் நீளமுள்ள எட்டு ஆலம் விழுதுத் துண்டுகளை சேகரித்து, செவ்வாய்க்கிழமை திருஷ்டிசுற்றி நீர்நிலையில் போடலாம்.
கும்பம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 17, 18, 26, 27. பாதக நாட்கள்: 1, 15, 16, 21, 22, 28, 29.
அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: ராகு 5-ல்; செவ்வாய், சூரியன், சுக்கிரன் கன்னியில்; குரு விருச்சிகத்தில்; சனி, கேது தனுசில் அமர்ந் துள்ளனர். முதல் வாரமே வெற்றிமீது வெற்றி வந்துவிடும். 7-ஆம் தேதி மட்டும் பணவிவகாரங்களில் கட்டுப்பாடு வேண்டும். 9, 10, 11-ல் உறவினர்கள் யாராவது உதாசீனப் படுத்துவார்கள். ராகு 5-ல் இருப்பதால், இம்மாதம் திருமண நாள் வந்தால் மனைவியின் கழுத்தில் இன்னுமொரு தாலி கட்டல் நன்று. சாதாரண நூலில் மஞ்சள் கோர்த்து கட்டுவது போதுமானது. அல்லது வீட்டுத் தலைவாசலில் ஒரு சமச்சதுர வெள்ளி உலோகத்துண்டைப் பதிக்கவும். கருவுற்ற மாதர் ராகுகாலத்தில் கிணற்று நீரைப் பருகுதல் வேண்டாம்.
சதயம்: வெளிநாட்டில் பணிபுரிவோர், அந்நியப் பொருள் ஏற்றுமதி- இறக்குமதி செய்வோருக்கு லாபம் கூடுதலாகும். 17, 18 தேதிகளில் எதிரிகளின் சூழ்ச்சி தடைகளை உருவாக்கும். முன்னாளில் தொல்லைதந்த உடல்நலப் பிரச்சினை மீண்டும் வரும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு பிறரால் நல்ல போதனைகள் கிடைக்கப்பெறும். இம்மாதம் குரு ஹோரையில் தீங்குகள் செய்வது கூடாது. சனிக்கிழமை 12.00 மணிக்குமேல் 1.00 மணிவரை உஷார் நிலையைக் கடைப்பிடிக்கவும். இம்மாதம் மயிலுக்கு உணவளிப்பது மிக நல்லது. விருச்சிக குருவை சரிசெய்ய, ஆலயத்திற்கு தேங்காய், தேங்காய் எண்ணெய் கொடுப் பது நன்று.
பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்: செவ்வாய் இருக்கும் இடம் சீராகக் காணப்படவில்லை. இருப்பினும் பொதுவாழ்வு, அரசியல் ஈடுபாடு, பொதுநலத் தொண்டுபுரிவோருக்கு 24, 25 தேதிகள் மிக உன்னதமாக செயல்படும். 26, 27-ல் நீங்கள் பிறருடைய விவகாரங்களில் தலையிடுவது கூடாது. அது பணவிரயத்தை ஏற்படுத்தும். கோர்ட் கேஸ் போன்றவை கவலை தரும்விதமாக அமையும். தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றை ஒன் றாகக் கலந்து உருவாக்கிய மோதிரத்தை வலது கையில் அணிதல் தற்காப்பாகும். செவ்வாயன்று வெளியே போகும்போது, எதிரே இறுதியாத்திரை வந்தால் போவதைத் தவிர்ப்பது நன்று.
மீனம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 10, 11, 19, 20, 28, 29. பாதக நாட்கள்: 2, 3, 4, 17, 18, 23, 24, 30, 31.
பூரட்டாதி 4-ஆம் பாதம்: 4-ல் ராகு பகவான் சனி, கேது பார்வையுடன் அமர்ந்துள்ளார். சிலருக்கு ஆபரணச் சேர்க்கையைத் தருவார். அந்நிய நாட்டில் வசிப்போர் சொந்த சம்பாத்தியத்தை அதிகரிக்கச் செய்யலாம். சகோதரர், தாயாரால் நன்மைகளைப் பெறலாம். இம்மாதம் நீண்டநாள் கனவுகள் நனவாகும். 7-ல் செவ்வாய்; கூடவே சூரியன். எனவே அரசு விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவேண்டும். 9, 11 தேதிகளில் உணவு உட்கொள்வதில் கட்டுப்பாடு வேண்டும். பொதுவில் நீங்கள் திருக்குவளை தலத்துக்குச் சென்று தியாகராஜப் பெருமானை வணங்கி குபேர சம்பத்து பெறலாம்.
உத்திரட்டாதி: எங்காவது கடன்பெற்று காரியங்களை முடித்திருந்தால், இம்மாதம் 19, 20, 21 தேதிகளில் நெருக்கடி வரும். ஏதாவது காரணம் சொல்லி சமாளிக்க நேரிடும். 22, 23 தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கட்கு வெற்றியின் பாதை சுலபமாகத் தெரியவரும். ராகு காலத்தில் சரஸ்வதியை நீலநிறப் பூக்களால் அலங்கரித்து வணங்கினால் கல்வி சுலபமாகும். ராகு, புதன் வீட்டில் இருப்பதால், கருவுற்ற பெண்மணிகளை பகையுணர்வாகக் கருதுவதுகூடாது. வாகனம் வைத்திருப்போர் வண்டியை கவனக்குறைவாக விட்டுச்செல்வது கூடாது. திருட்டுப்போய்விடும். மேடைப் பேச்சாளர்களுக்கு குரல்வளம் பாதிக்கப் படலாம்; உஷார். காலநிலையை கவனத்தில் கொள்ளவும்.
ரேவதி: அலுவலகத்தில் பணிபுரியும் தம்பதிகளுக்கு வேலைப்பளுவால் மனநிம்மதி இல்லாமல் போகும். மாதத்தின் கடைசி வாரம் பொருளாதார வசதி மிகையாகும். வெளிநாட்டில் வசிப்போரிடம் பொருளுதவி பெற்றிருந்தால் நெருக்கடி தருவார்கள். 26, 27 தேதிகளில் குடும்பத்திற்கான எல்லா சூழ்நிலையிலும் அதிக கவனமாக செயல்படவேண்டும். கௌரவம் ஓங்கும். எவரிடமும் முழு நம்பிக்கையுடன் பணப்பட்டுவாடா கூடாது. தவறுதல் நடக்கும் வாய்ப்புள்ளது. துர்க்கையை வணங்குவது போதுமானது. "துர்காத் ஸந்த்ராயதே யஸ்மாத் தேவிதுர் கேதி கத்யதே ப்ரபத்யே சரணம் தேவீம் தும்துர்கே துரிதம் ஹர'- இதனை மனதில் கொள்ளவும்.
செல்: 93801 73464